எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிளென் பாக்கியம்கட்டுரைகள்

முடிவிலிருந்து துவங்கு

நான் சிறுவனாக இருக்கும்பது “நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்” என்று அநேகர்  கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் என் பதில் மாறும்: மருத்துவர், தீயணைப்பு படையினர், ஊழியக்காரர், விஞ்ஞானி அல்லது தொலைக்காட்சி  நடிகர். இப்பொழுது நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகியபின், இவ்விதமான கேள்வி எவ்வளவு கடினமாக காணப்படும் என்று  நான் உணருகிறேன்.  சில சமயங்களில் “நீ எதிலே சிறந்து விளங்குவாய் என்று எனக்கு தெரியும்” என்று பிள்ளைகளிடத்தில் சொல்லத்தோன்றும். அவ்வப்போது பிள்ளைகள் தங்களை காண்பதற்கு மேலாகவே, பெற்றோர்கள் அவர்களில் காண்கிறார்கள்.

இது பவுல், தான் அன்புகூர்ந்து நேசித்த பிலிப்பிய சபை விசுவாசிகளிலே (பிலிப்பியர் 1:3) காண்பதிற்க்கு ஒப்பிடலாம். எல்லாம் கடந்த பின்பு அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், என்று அவர்கள் கடை நிலைமையை  அறிந்திருந்தார். ஏனெனில் வேதம் கதையின் இறுதியில் ஒரு அருமையான காட்சியை காண்பிக்கிறது: உயிர்த்தெழுதலும், எல்லா காரியங்களும் புதுப்பிக்கப்படுதலும் ( 1 கொரிந்தியர் 15, வெளிப்படுத்தின விஷேசம் 21 ஐ பார்க்க). பின்னுமாக இந்த கதையை எழுதியவர் யார் என்றும் அது சொல்லுகிறது.

சிறைச்சாலையிலிருந்து பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இந்த நிருபத்தின்  முதல் வரிகள்: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:5) என்று பிலிப்பியருக்கு நினைவுபடுத்துகிறார்.

உங்களில் நல்ல வேலையை தொடங்கிய இயேசு அதை முடித்திடுவார். ‘முடிப்பது’ என்பது மிக முக்கியமான ஒரு வார்த்தை. ஏனென்றால் இறைவன் எதையும் அரைகுறையாக விடுவதில்லை.

நட்பு துடுப்பு

ஒரு கடல் உயிரியலாளர் நீந்திக்கொண்டிருக்கும்போது, ஒரு 50,000 பவுண்ட் கொண்ட திமிங்கலம் திடீரென தோன்றி அவளை தன் துடுப்பின் கீழ் சொருகிக்கொண்டது. அந்தப் பெண் தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தாள். ஆனால் மெதுவாக வட்டமடித்து நீந்திய அந்தத் திமிங்கலம் அவளை விடுவித்தது. பிறகு தான் ஒரு சுறா அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதைப் பார்த்தாள். அந்தத் திமிங்கலம் அவளை ஆபத்திலிருந்து பாதுகாத்ததாக நம்பினாள்.

அபாயம் நிறைந்த இந்த உலகத்தில், மற்றவர்களை கவனிக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆனால் மற்றொருவருக்காக நான் உண்மையிலேயே பொறுப்பேற்க வேண்டுமா? என நீங்கள் கேட்கலாம். அல்லது காயீனைப்போல “என் சகோதரனுக்கு நான் காவலாளியா” (ஆதி. 4:9) என்று கேட்கலாம். பழைய ஏற்பாட்டின் மற்ற பகுதிகள் இடிமுழக்கத்தைப்போல எதிரொலித்து பதிலளிக்கிறது. ஆம். ஆதாம் எப்படி தோட்டத்தை கவனித்துக்கொண்டாரோ அப்படியே காயீனும் ஆபேலை கவனித்துக்கொண்டிருக்க வேண்டும். இஸ்ரவேல் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்து ஏழைகளை காக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவர்கள் மக்களை சுரண்டி, ஏழைகளை ஒடுக்கி, தங்களைப்போல பிறனையும் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை கைவிட்டு, நேர்மாறான காரியங்களைச் செய்தார்கள் (ஏசா. 3:14-15).

ஆனாலும், காயீன் ஆபேல் நிகழ்ச்சியில், தேவன் அவனை துரத்திவிட்ட பிறகும், அவனை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் (ஆதி. 4:15-16). காயீன் ஆபேலுக்கு என்ன செய்திருக்க வேண்டுமோ அதை தேவன் காயீனுக்கு செய்தார். தேவன், இயேசுவாய் வந்து நமக்கு செய்யவெண்டியதின் ஒரு அழகான அடையாளமாயிருந்தது.

இயேசு நம்மை அவருடைய கவனிப்பில் வைத்துக்கொள்கிறார். நாமும் போய் மற்றவர்களுக்கு அப்படியே செய்ய பலப்படுத்துகிறார்.

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

ஒரு பெரிய வேலை

காவலர் ஒருவர், கதவு ஒன்றில், அது அடித்து மூடிவிடாமல் இருக்கும்படி, அதில் ஒட்டப்பட்டிருந்த நாடாவைக் கண்டு அதை அகற்றினார். பின்னர், மீண்டும் அக்கதவை சரிபார்த்த போது, அதில் திரும்பவும் நாடா ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டார், உடனே அவர் காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார், அவர்கள் வந்து 5 கள்ளர்களைப் பிடித்தனர்.

அமெரிக்காவில் பிரசித்திப் பெற்ற அரசியல் கட்சியின் தலைமையகமாகச் செயல்படும், வாஷிங்டன் டி சி யிலுள்ள வாட்டர் கேட் கட்டடத்தில் பணிபுரிந்த போது, இந்த இளம்காவலர்,  பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மிகப் பெரிய ஊழலை வெளிக்கொண்டுவர காரணமாயிருந்தார், அவர் தன் வேலையை மிகக் கவனமாகச் செய்ததாலேயே அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.                                                       எருசலேம் அலங்கத்தை திரும்பக் கட்டும் வேலையில் நெகேமியா ஈடுபட்டிருந்தார். அந்த வேலைக்கு அவர் அதிக முக்கித்துவம் கொடுத்தார். அந்த திட்டம் முடியும் தருவாயில் இருந்த போது, அருகிலிருந்த எதிரிகள், அவரை அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு    வந்து, அவர்களைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர். நண்பர்களைப் போல நடித்து, மாய வலையை விரித்தனர். இந்த நயவஞ்சகர்களுக்கு ( நெகே. 6:1-2). நெகேமியா கொடுத்த பதில் அவருடைய மனத்தெளிவை நமக்கு காட்டுகின்றது. “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது; நான் அந்த வேலையை விட்டு, உங்களிடத்திற்கு வருகிறதினால், அது மினக் கட்டுபோவானேன்?” என்கின்றார் (வ.3).

அவருக்குச் சில அதிகாரங்கள் உறுதியாக இருந்த போதும், அவர் தன்னை மிக உயர்ந்த ஹீரோவாக நினைக்கவில்லை. அவர் ஒரு யுத்த வீரரும் அல்ல, கவிஞரும் அல்ல, தீர்க்கதரிசியும் அல்ல, அரசனும் அல்ல, துறவியும் அல்ல. அவர் ராஜாவுக்கு ரசம் பறிமாறும் தற்காலிக வேலையாள். ஆனாலும் அவர் முக்கியமான தேவப் பணியைச் செய்வதாக நம்பினார். நாமும், தேவன் நமக்கு கொடுத்துள்ள வேலையை மிக முக்கியமாகக் கருதுவோம். அவர் காட்டும் வழியில், அவருடைய வல்லமையால் அதனைச் சிறப்பாகச் செய்வோம்.

தேவனுடைய ராஜியத்தை உருவாக்குதல்

“அப்பா, நீங்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?” நான் அவளோடு விளையாட வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, என்னுடைய இளைய மகள் இக்கேள்வியைக் கேட்டாள். என்னுடைய வேலையைத் தள்ளிவைத்துவிட்டு, அவளோடு நேரம் செலவிடலாம், ஆனால், என்னுடைய வேலையில், நான் கவனிக்க வேண்டிய காரியங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கின்றது. இல்லையென்றால், அது ஒரு நல்ல கேள்விதான். நாம் ஏன் வேலை செய்கின்றோம்? நமக்கும், நாம் நேசிப்பவர்களுக்கும் தேவையானவற்றை கொடுப்பதற்காகவா? கூலியில்லாத வேலையைக் குறித்து என்ன சொல்லுவோம்? நாம் ஏன் அதனைச் செய்ய வேண்டும்?

ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில், தேவன் முதல் மனிதனை தோட்டத்தில், “அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” (வ.15) என்பதாகக் காண்கின்றோம். என்னுடைய மாமனார் ஒரு விவசாயி, அவர், தனக்கு நிலத்தின் மீதும், உயிரினங்களின் மீதும் உள்ள அன்பினாலேயே விவசாயம் செய்வதாக அடிக்கடி கூறுவார். இது மிகவும் அருமையானது! ஆனால், தன்னுடைய வேலையை நேசிக்காதவர்களுக்கு, அது அநேக கேள்விகளை எழுப்புகின்றது. ஏன் தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட வேலையில் வைத்தார்?

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் இதற்கான பதிலைத் தருகின்றது.  தேவன் படைத்த உலகத்தை ஆளும்படி, நாம் தேவனுடைய சாயலில் உருவாக்கப் பட்டுள்ளோம் (வ.26). பிறசமயத்தினரின் கதைகளில், அவர்களின் தெய்வங்கள் மனிதனை அடிமைகளாக இருக்கும்படி உருவாக்கின என்பதாகக் காண்கின்றோம். உண்மையான தேவன் மனிதனை அவருடைய பிரதி நிதியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தில் காண்கின்றோம்., அவருடைய பிரதி நிதியாக அவருடைய படைப்புகளைக் காக்கும்படி நம்மை விரும்புகிறார். அவர் விரும்பும் அன்பான கட்டளையை நாம் இவ்வுலகில் நிறைவேற்றுவோம். வேலை என்பது தேவன் படைத்த உலகை, அவருடைய மகிமைக்காக பண்படுத்துவதாகும்.

விலையேறப் பெற்ற சந்தோஷம்

அந்த டிஜிட்டல் மெல்லிசையைக் கேட்டவுடன், நாங்கள் ஆறு பேரும் செயலில் இறங்கினோம். சிலர் கால்களில் ஷூவைப் போட்டனர், சிலர் வெறுங்காலோடு சென்று, முன்கதவைத்       திறந்தனர். சில நொடிகளில் நாங்கள் அனைவரும் வேகமாகச் சென்று, அந்த ஐஸ்கிரீம் வண்டியைத் தொடர்ந்தோம். இன்று தான், கோடைகாலத்தின் முதலாவது வெப்பநாள். இதனைக் குளிர்ந்த இனிப்போடு கொண்டாடுவதைக் காட்டிலும் சிறந்தது என்ன இருக்க முடியும்! சில காரியங்களை அது தருகின்ற மகிழ்ச்சிக்காக நாம் செய்வதுண்டு, மற்றப்படி வேறெந்த ஒழுங்கு முறையோ, கட்டாயமோ கிடையாது.

மத்தேயு 13:44-46 ல், இரண்டு உவமைகளிலும், வேறொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாவற்றையும் விற்று என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கதைகள், ஒரு தியாகத்தைக் குறிப்பிடுவதாக நம்மை நினைக்கச் செய்யும். ஆனால், உண்மை அதுவல்ல. முதலாவது கதையில், அந்த மனிதனின் “சந்தோஷம்” எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கச் செய்தது. சந்தோஷம் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது, குற்ற உணர்வோ அல்லது கடமையோ அல்ல.

இயேசு நம் வாழ்வின் ஒரு பகுதியில் மட்டும் இருப்பவர் அல்ல, அவர் நம்முடைய முழு வாழ்வையும் விரும்புகின்றார். அந்தக் கதைகளில் வரும் இரண்டு பேருமே “எல்லாவற்றையும் விற்றனர்” (வ.44). ஆனால் அதில் மிக முக்கியமானது என்னவென்றால், எல்லாவற்றையும் விற்றாலும் அவனுக்கு லாபம் கிடைக்கின்றது. நாம் அதனை நினைத்திருக்க மாட்டோம். கிறிஸ்தவ வாழ்வு என்பது நம்முடைய சிலுவையை எடுத்துக் கொள்வது அல்லவா? ஆம், அது தான். ஆனால், நாம் மரிக்கும் போது வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றோம். நம்முடைய வாழ்வை இழக்கும் போது, அதனைக் கண்டுபிடிக்கின்றோம். “எல்லாவற்றையும் விற்கும்போது” நாம்    அந்த விலையேறப் பெற்ற பொக்கிஷமாகிய இயேசுவைப் பெற்றுக் கொள்கின்றோம்! சந்தோஷம் காரணி, அர்ப்பணிப்பு அதன் விளைவு.

இயேசுவாகிய பொக்கிஷத்தைப் அறிவதே நமக்கு கிடைக்கும் பலன்.

நம்மைக் குறித்து தாழ்வாக மதிப்பிடல்

ஓர் இளைஞன், அவனுடைய விளையாட்டு குழுவின் தலைவனானான். விளையாட்டை தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்த இக்குழு, முகச்சவரம் கூட செய்யத்தேவையில்லாத, சிறிதளவே பண்பட்ட இளைஞனால் வழி நடத்தப்படுகின்றது. அவன் முதல் முறையாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அது வரவேற்கத்தகுந்ததாக இல்லை. அவன் தன்னுடைய பயிற்சியாளரைச் சந்திப்பதையும், தன்னுடைய குழுவினரைச்       சந்திப்பதையும் தள்ளிப் போட்டான், கருத்துக் கணிப்புகளைக் கூறுவதற்கு தயங்கினான்,  தன்னுடைய வேலையைச் செய்யும் போது முணுமுணுத்தான்.அந்த நாட்களில் அவனுடைய குழு பின்னடைதலைச் சந்தித்தது, கடைசியில் அந்த இளைஞன் விளையாட்டை வியாபாரமாக்கினான். அவன் தன்னுடைய குழுவை வழி நடத்தக்கூடிய அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதையே    புரிந்துகொள்ளவில்லை அல்லது அவன் தன்னால் முடியும் என்பதை நம்பவில்லை.

தன்னுடைய வாழ்வில் தோல்விகளைச் சந்தித்த சவுல், “தன்னுடைய கண்களுக்கு மிகவும் சிறியவனாக” ( 1 சாமு. 15:17) காணப்பட்டான். தன்னுடைய கூட்டத்தினர் அனைவரையும் காட்டிலும் மிக உயரமானவன் என்று வர்ணிக்கப்படும் ஒருவன் இப்படிச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. எல்லா ஜனங்களும் அவனுடைய தோளுக்குக் கீழாயிருந்தார்கள் (9:2). ஆனால், அவனோ தன்னை அவ்வாறு பார்க்கவில்லை. தனக்கு கீழேயுள்ள ஜனங்களின் சொற்படி நடப்பவனாக காணப்படுகின்றான் என்பதை இந்த அதிகாரத்தில் காண்கின்றோம். ஜனங்களல்ல, தேவன் அவனுக்கு   இந்த பணியைக் கொடுத்தார் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.

 ஒவ்வொரு தனி மனிதனுடைய தோல்விக்கும் காரணமென்ன என்பதை சவுலின் இக்காரியம் காட்டுகின்றது. நாம் தேவனுடைய சாயலில், அவருடைய அரசாட்சியை வெளிக்காட்டும்படி உருவாக்கப் பட்டோம் என்பதைக் காணத்தவறிவிடுகின்றோம், கடைசியில், நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, உலகில் அழிவை கொண்டுவருகின்றவர்களாக இருக்கின்றோம். இதனைச் சரிசெய்ய நாம்தேவனிடத்திற்குத் திரும்புவோம், நம்முடைய பிதா தமது அன்பினால் நம்மை மாற்றுவார், அவர் நம்மை தமது ஆவியினால் நிரப்புவார், இயேசு நம்மை இவ்வுலகினுள் நடத்துவார்.

நம்முடைய விருப்பத்தின் படி செல்லும் போது

அலைபேசி சேவையும் இல்லை, நடைபாதையின் வரைபடமும் இல்லை, எங்கள் நினைவில் பதிந்திருந்த வரைபடம்தான் எங்களை வழி நடத்தியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, கடைசியாக அந்தக் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அடைந்தோம். ஒரு திருப்பத்தை தவற விட்டதால், மேலும் அரை மைல் தூரம் நடந்தோம்,  நாங்கள் நீண்ட பாதை வழியே நடக்க வேண்டியதாகி விட்டது.

நம்முடைய வாழ்வும் சில வேளைகளில் இதேப் போன்றே உள்ளது. நாம் செய்யும் காரியங்கள் சரியா அல்லது தவறா என்று மட்டும் கேட்பதோடல்லாமல், இது எங்கே என்னைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதையும் கேட்க வேண்டும். சங்கீதம் 1, இரண்டு வகையான வழிகளை ஒப்பிடுகின்றது. ஒன்று நீதிமானின் வழி (தேவனை நேசிப்பவர்கள்), மற்றது துன்மார்க்கனின் வழி (தேவனை நேசிப்பவர்களை பகைப்பவர்கள்). நீதிமான் மரத்தைப் போல செழிப்பான், துன்மார்க்கனோ காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போல் இருக்கிறான் (வ.3-4). செழிப்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் இந்த சங்கீதம் காட்டுகின்றது. அவன் எல்லாவற்றிற்கும் தேவனையே சார்ந்து வாழ்ந்து காட்டுவான்.

நாமும் இத்தகைய மனிதனாக எப்படி மாறலாம்? சங்கீதம் 1, நம்மை துன்மார்க்கருடைய நட்பிலிருந்தும், விரும்பத்தகாத பழக்கங்களில் இருந்தும் விலகுமாறு கற்பிக்கின்றது. தேவனுடைய வார்த்தையில் பிரியமாய் இருக்கும் படி (வ.2) நமக்கு கற்பிக்கின்றது. தேவன் நம் மீது கண்ணோக்கமாய் இருக்கும் போது தான், நம்முடைய வாழ்வு செழிக்கும். “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்” (வச. 6).

உன்னுடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்படைத்து விடு. போகிற இடத்தை அறியாமல் சென்று கொண்டிருக்கின்ற உன்னுடைய பழைய வழியை, அவர் மாற்றி, புதிய வழியில் நடத்துவார், வேத வார்த்தையாகிய நதியை உனக்குள்ளே பாய்ந்து செல்லும்படி செய், அப்பொழுது உன்னுடைய இருதயமாகிய வேர்த் தொகுதி செழித்து வளரும்.

ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்

எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.